தாய் வீட்டிற்கு சென்ற பெண் முகம் சிதைக்கப்பட்டு சடலமாக மீட்பு : அதிர்ந்துபோன கணவர்!!

472

ராணிப்பேட்டை….

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த குக்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி மகேஸ்வரி சித்தாள் வேலை செய்து வருகிறார். இவருக்கு பலருடன் தொடர்பு இருந்ததால் கணவன் – மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது தாய் வீட்டிற்கு சென்றுவருவதாக கணவரிடம் மகேஸ்வரி சொல்லிட்டு சென்ற நிலையில், வெகுநேரம் வீடு திரும்பாததால் அவரை காணவில்லை என ஜெயசங்கர் போலீசில் புகார் அளித்தார்.

தொடர்ந்து போலீசாரும், மகேஸ்வரியின் உறவினர்களும் அவரை தேடி வந்த நிலையில், குக்குந்தி கிராமம் அருகே உள்ள விவசாய கிணற்றில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கிடப்பதாக ஆற்காடு கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு கிராமிய காவல்துறையினர் கிணற்றில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் விழுந்து கிடந்த சடலத்தை மீட்டு விசாரித்ததில் அது மகேஸ்வரி என தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த உயிரிழந்த மகேஸ்வரியின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் அவரது உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.