தாய்ப்பால் தொண்டையில் சிக்கி பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!

1072

திருச்சூர்…..

திருச்சூர் அருகே தாய்ப்பால் தொண்டையில் சிக்கி 4 மாத பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.

கேரளாவின் திருச்சூர் அருகே மாணி பரம்பில் எபி மற்றும் ஷெல்கா என்ற தம்பதிகளின் பெண் குழந்தை உயிரிழந்தது. வியாழக்கிழமை காலை குழந்தையை உறக்கத்தில் இருந்து எழுப்பியபோதும், அசைவின்றி கிடந்துள்ளது.

இதனால் பதறிப்போன பெற்றோர் சாலக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் உயிரிழந்தது. தாய்ப்பால் தொண்டைக்குழியில் சிக்கியிருந்ததே மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.