சென்னையில்…….
சென்னையில் இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வழக்கில் இ ளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரவாயலை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கு திருமணமாகவில்லை, இந்நிலையில் நேற்று வயிற்றுவலிப்பதாக கூறியுள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றதும், அவரை பரிசோதித்த ம ருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாகவும், சில மணிநேரங்களில் குழந்தை பிறந்துவிடும் எனவும் கூறியுள்ளனர்.
இதை கேட்டதும் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர், சில மணிநேரங்களில் அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.
இதனையடுத்து அந்த பெண்ணிடம் விசாரித்ததில், லோகேஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும், திருமண ஆசை காட்டி தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து லோகேஷ் மீது வழக்கு பதிவு செய்த பொ லிசார் கை து செய்து வி சாரணை நடத்தினர். விசாரணையில், கடந்தாண்டு வேலையாக மதுரவாயல் வந்துள்ளார் லோகேஷ், அவர் வந்த பைக் பஞ்சராகிவிட தாகத்துக்கு அருகிலிருந்த வீட்டில் தண்ணீர் கேட்டுள்ளார்.
பா திக்கப்பட்ட இளம்பெண் தண்ணீரை வழங்க, அவளது அழகில் மயங்கிய லோகேஷ் போன் நம்பரை எழுதி கொடுத்துவிட்டு வந்துள்ளார்.
ஒரு வாரம் வரை காத்திருந்தும் அப்பெண் போன் செய்யாததால் மறுபடியும் வீட்டுக்கு சென்று தண்ணீர் கேட்டுள்ளார்.
இப்படி தொடர்ந்து அப்பெண் செல்லும் இடமெல்லாம் துரத்திச் சென்று காதல் வலையில் சிக்கவைத்துள்ளார். ஆசை வார்த்தைகள் கூறி அப்பெண்ணுடன் தனிமையில் இருந்து கர்ப்பமாக்கிவிட்டு ஏ மாற்றியது தெரியவந்துள்ளது. லோகேசுக்கு ஏற்கனவே திருமணமாகி கு ழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.