திருநங்கை தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணையில் நீடிக்கும் மர்மம்!! நடந்தது என்ன?

376

சென்னை….

சென்னை புளியந்தோப்பு குருசாமி நகரில் வசித்து வருபவர் ரமணி. இவருடைய கணவர் கோவிந்தராஜ் 10 வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு சென்று விட்டார். இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் இருந்தனர்.

ராஜேஸ்வரி திருமணம் ஆகி கணவருடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் , விக்னேஷ் 11ம் வகுப்பு படிக்கும் போது திருநங்கையாக மாறினார். பின்னர் விந்தியஸ்ரீ என்ற பெயரில் வியாசர்பாடியில் உள்ள சில திருநங்கைகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

பின்னர் புளியந்தோப்பு கிரே நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியே தங்கி இருந்தார். அருகில் வசித்து வந்த தாய் ரமணியை அவ்வப்போது பார்த்து விட்டு செலவுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் , நேற்று புளியந்தோப்பில் உள்ள பாட்டி வீட்டில் இருந்த தாய் ரமணியை வீட்டுக்கு வருமாறு விந்தியஸ்ரீ அழைத்துள்ளார். அப்போது தாய் பாட்டியிடம் பேசி விட்டு வருகிறேன், நீ வீட்டில் இரு என ரமணி கூறியதை தொடர்ந்து விந்தியஸ்ரீ வீட்டுக்கு சென்றுள்ளார்.

ரமணி இரவு விந்தியஸ்ரீ வீட்டுக்கு சென்று பார்த்த போது விந்தியஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பேசின் பிரிட்ஜ் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விந்தியஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.