திருமணத்திற்கு தடையாக இருந்த கள்ளக்காதலனின் மகனை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

775

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருமணத்திற்கு தடையாக இருந்த கள்ளக்காதலனின் மகனை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.விசைத்தறியாளர் கோபிநாத் என்பவருக்கு மகாலட்சுமி என்பவருக்கு கடந்த சில மாதங்களாக தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மகாலட்சுமி வலியுறுத்தியுள்ளார். ஆனால் தனக்கு திருமணமாகி மகன் இருப்பதால், உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என கோபிநாத் மறுத்துள்ளார்.

இதனால், கோபிநாத்தின் மகன் பாலமுருகனை முகத்தில் சூடு வைத்து நீரில் மூழ்கடித்து கொன்றுள்ளார். இந்த வழக்கு முதன்மை நீதிமன்றத்தில் நடந்ததையடுத்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.