நடிகர் சிவகுமார் அவர்களின் குடும்பத்தில் சினிமா பக்கம் வராமல் இருந்தது அவரது மகள் மற்றும் மனைவி. தற்போது அவரது மகள் பிருந்தா Mr. சந்திரமௌலி என்ற படம் மூலம் பாடகியாக அவதாரம் எடுத்துவிட்டார்.
சமீபத்தில் பாடுவதில் வந்த ஆர்வம் குறித்தும் தன் அண்ணிகள் குறித்தும் பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவர், பொதுவாக பண்டிகை என்றால் நாம் சாமி கும்பிடுவது, விருந்து சாப்பிடுவது என்று செய்வோம், அவ்வளவுதான்.
ஆனால் வீட்டையே அலங்கரித்து, பார்ட்டி ஏற்பாடு செய்வது என இப்படி சின்ன சின்ன விஷயங்கள் செய்து வீட்டையே சந்தோஷமாக மாற்றிவிடுவார்கள்.
வீடு, சினிமா என இரண்டிலும் இவ்வளவு வேலைகள் செய்வார்கள் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்றார்.