கன்னியாகுமரி…..
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மாத்தூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் சாஜன் (வயது28). நாகர்கோவில் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் பக்கத்து ஊரான பள்ளிக்கோணத்தை சேர்ந்த அனிஷாவும் (26) கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
அனிஷ எம்.சி.ஏ. பட்டதாரி. கடந்த சில மாதங்களாக ஒரு வங்கியில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்தார்.
இவர்கள் இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் இருவரும் சாஜன் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அனிஷா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இதற்கிடையே நேற்று மாலையில் சாஜின் வீட்டில் இல்லாத நேரத்தில் அனிஷா வெகுநேரமாக அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அனுஷாவின் மாமியார் பால் கொடுக்க அறைக்கு சென்றார்.
அப்போது, அனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அருமனை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 8-வது மாதத்தில் பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.