திருமணமாகி ஒரே மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

291

நாகர்கோவில்….

நாகர்கோவில் அருகே புதுப்பெண் ஒரே மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகள் தனுசியா (20).

இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாத்தியார்விளையைச் சேர்ந்த செல்வமூர்த்திக்கும் (34) கடந்த மாதம்தான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது செல்வமூர்த்திக்கு 10 கிராம் செயின், 2 கிராம் மோதிரம், 2 கிராம் கம்மல் உள்ளிட்ட தங்க நகைகளும் போட்டுள்ளனர்.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்து முடிந்த திருமணத்தை அடுத்து புது தம்பதியினர் நாகர்கோவிலில் உள்ள செல்வமூர்த்தி வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் தனிப்பட்ட பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த தனுசியா அடிக்கடி பெற்றோருக்கு பெண் செய்து குறையை கொட்டி வந்துள்ளார். பெற்றோரும் அவரை சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கொத்தனாரான செல்வமூர்த்தி நேற்றுமுன்தினம் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனுசியா மட்டும் தனியாக இறந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வேலை முடிந்து செல்வமூர்த்தி வீட்டுக்கு வந்தபோது தனுசியா தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்துள்ளார். அதை பார்த்து கதறி அழுத செல்வமூர்த்தி போலீசுக்கும், தனுசியாவின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த வடசேரி போலீசார் தனுசியாவின் உடலை தூக்கில் இருந்து இறக்கி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து தனுசியாவின் தற்கொலை குறித்து  அவரதுபெற்றோர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், புதுப்பெண் ஒரே மாதத்தில் இறந்துள்ளதால் கோட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது. திருமணமாகி ஒரே மாதத்தில் புதுப்பெண் மரணமடைந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.