திருமணமாகிய 2 மாதத்தில் கணவன் மாயம் : விரக்தியில் மனைவி தீக்குளிப்பு!!

485

திருவள்ளூர் அருகே திருமணமான இரண்டே மாதங்களில் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் மாயமாகியுள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாமல், மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

வேலூர் மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த தங்கராஜுக்கும், வேலூரை சேர்ந்த அவரது அத்தை மகள் அர்ச்சனா தேவிக்கும் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு முன்பு வரை அவரது சொந்த ஊரில் கோமதி என்ற பெண்ணை காதலித்து வந்த தங்கராஜ், திருமணத்திற்கு பின்பும் கோமதியுடன் இணைப்பில் இருந்துள்ளார்.

இது அர்ச்சனாவுக்கு தெரியவரவே, தங்கராஜை கண்டித்துள்ளார். ஆனால் இதனை பொருட்படுத்தாத தங்கராஜ், தினமும் அர்ச்சனாவுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அத்தை வீட்டிற்கு சென்ற தங்கராஜ், அங்கு அர்ச்சனாவை அவரது வீட்டில் விவிட்டுவிட்டு, தன்னுடைய உள்ளூர் காதலி கோமதியுடன் மாயமாகியுள்ளார்.

இதனை தெரிந்துகொண்ட அர்ச்சனா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால் கால்துறையின் அலட்சியம் காரணமாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில், திடீரென அர்ச்சனா வீட்டின் பின்புறம், மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்கள் விரைந்து சென்று காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.