திருமணமான 30 நிமிடத்தில் புதுப்பெண் செய்த செயல் : நிலைகுலைந்த பெற்றோர்!!

441

தெலுங்கானா…

திருமணமான 30 நிமிடத்தில் மணப்பெண் ஒருவர் தனது காதலனுடன் எஸ்கேப் ஆகியுள்ளது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சம்ரீன் பேகம் என்ற பெண்ணுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த முகமது இலியாஸ் (22) என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்று, வெள்ளிக்கிழமை திருமணம் முடிந்துள்ளது.

இஸ்லாமிய முறைப்படி நடந்த இந்த திருமணத்திற்கு முன்பு 2 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரொக்கப்பணம் வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுக்கப்பட்டது.

திட்டமிட்டபடி திருமணம் நடந்து முடிந்து, இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், மணமகள் தனது தோழியுடன் பியூட்டி பார்லருக்கு செல்வதாக கூறியுள்ளார்.

சரி என்று சம்மதித்த உறவினர்கள் அவரது பாதுகாப்பு இரண்டு பேரை அனுப்பிவைத்துள்ளனர். அப்பொழுது பியூட்டி பார்லர் முன்பு காரில் இருந்து இறங்கிய அப்புதுப்பெண் உடன்வந்தவர்களின் கண்ணை மறைத்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இருகுடும்பத்தினருக்கும் தகவல் கூறிய நிலையில், பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பொலிசாரின் விசாரணையில் குறித்த பெண் தனது காதலனுடன் எஸ்கேப் ஆகியுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், மகள் செய்த காரியத்திற்காக கடும் அதிர்ச்சியில் உறைந்த அவரது பெற்றோர்கள் மனமகன் வீட்டாரிடம் மன்னிப்பு கோரினர்.

இந்நிலையில் பொலிசார் அந்த பெண்ணை அழைத்துச் சென்ற காதலன் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.