திருமணமான மலேசிய பெண்ணுடன் தொடர்பில் இருந்த தமிழர் கொலை! ஒரு மாதம் கழித்து அம்பலமான உண்மை

650

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி சுரங்கப் பாதையில் கடந்த மாதம் ஏப்ரல் 25-ந்தேதி வெட்டப்பட்ட நிலையில் விஜயராகவன் என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், மலேசியாவில் ஏற்பட்ட கள்ளக்காதலால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.விஜயராகவன் 4 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் வேலை பார்த்துள்ளார். அங்கு திருமணமான நிர்மலா தேவி என்பவருடன் இவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இது அந்த பெண்ணின் கணவருக்கு தெரிந்ததும் பிரச்சனை ஆரம்பமானது. இதனால் விஜயராகவன் தமிழகம் திரும்பிவிட்டார். எனினும் அந்த பெண் அடிக்கடி தமிழகம் வந்து விஜயராகவனுடன் சேர்ந்து ஜாலியாக சுற்றியும் , உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

கடைசியாக அந்த பெண் ஏப்ரல் 13 ஆம் திகதி தமிழகம் வந்துள்ளார். அவருடன் சேர்ந்து விஜயராகவன் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்துள்ளார்.

கள்ளக்காதலை அறிந்த அந்த பெண்ணின் கணவர் ரவி, கூலிப்படையை ஏவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்துள்ளது. நிர்மலாவைத் தவிர இன்னும் சில பெண்களுடன் விஜயராகவனுக்கு பழக்கம் ஏற்பட்டது. தன்னுடன் பழகிய பெண்களுடன் எடுத்த செல்பி போட்டோக்களை நிர்மலாவுக்கு விஜயராகவன் அனுப்பியுள்ளார். அதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால், நிர்மலாவும் ரவியும் சேர்ந்து, விஜயராகவனை கொலை செய்துள்ளனர். செந்தில்சிவா என்ற கூலிப்படை நபரின் உதவியுடன் இந்த கொலை நடந்துள்ளது.

இந்த வழக்கில் நிர்மலா, ரவியைத் தேடி வருகிறோம். அவர்கள் மலேசியாவில் இருப்பதால், அங்குள்ள பொலிசார் மூலம் அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.