திருமணம் நடந்தால் நான் செத்துடுவேன்: கதறிய பெண்! இறுதியில் நடந்தது என்ன?

379

பிர்தௌஸ்…

தனக்கு கட்டாய திருமணம் நடக்க இருப்பதாக இளம்பெண் வாட்ஸ்அப்பில் பதிவிட்ட வீடியோ வைரலானதையடுத்து கடைசி நேரத்தில் அவரது திருமணத்தை போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

சென்னை புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்ப சாமி நகரை சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. இவரது மகள் ஜன்னதுல் பிர்தௌஸ் (22). இவரை, முறை மாமனுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.

ஆனால், இந்த திருமணத்திற்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் திருமண வேலைகளில் இரு வீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

நேற்று காலை இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணப்பெண், இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை.

எனது முறை மாமனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. ஆனாலும், எனது பெற்றோர் கட்டாயப்படுத்தி, என் விருப்பம் இல்லாமல் அவருடன் எனக்கு திருமணம் நடத்த உள்ளனர்.

இந்த திருமணம் நடைபெற்றால் பிறகு நான் உயிருடன் இருக்கப் போவதில்லை, என தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து, அதை வாட்ஸ்அப் மூலம் நண்பர்களுக்கு பகிர்ந்தார். இந்த வீடியோவா வைரலானது.

இதை பார்த்த புழல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், நேற்று காலை திருமணம் நடக்க இருந்த வீட்டிற்கு சென்று, அந்த இளம்பெண்ணின் திருமணமத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இளம்பெண்ணின் வீடியோ வைரலானதை அடுத்து திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.