மலேசியா….
மலேசியாவிற்கு வேலைக்கு சென்று திரும்பிய தமிழக இளைஞர் நடுவானிலே உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் நீர்ப்பழனி அருகே உள்ள கிராமம் நரியப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு வேல்மணி(36) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு வேல்மணிக்கும், நிஷாராணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் வேல்மணிக்கு மலேசியாவில் வேலை கிடைத்துள்ளது. அதாவது தமிழகத்தின், மணப்பாறையை சேர்ந்த ரவி மற்றும் அவரது மகன் ரவிராஜ் ஆகியோர் மலேசியாவில் சொந்தமாக சலூன் கடை வைத்துள்ளனர்.
அந்த கடையில்தான் வேல்முருகன் வேலைக்கு சென்றுள்ளார். நான்கு ஆண்டுகளாக வேல்முருகன் அங்கு வேலை பார்த்து வந்த நிலையில், அடிக்கடி அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், ஒப்பந்த காலம் முடிந்தும், வேல்முருகனை சொந்த ஊருக்கு அனுப்பாமல், அதே கடையில் தொடர்ந்து வேலை பார்க்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் உடல்நிலை மேலும் பாதித்துள்ளது.
எனவே, வேல்முருகன் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை, 4 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மலேசியாவில் இருந்து தமிழகத்தின் திருச்சிக்கு வரும் விமானத்தில் வேல்மணி புறப்பட்டுள்ளார்.
விமானம் திருச்சி வந்தடைந்ததும் மற்ற பயணிகள் எல்லாம் இறங்கிவிட்டனர்.ஆனால், வேல்முருகன் மட்டும் இருக்கையில் உட்கார்ந்த நிலையிலேயே கிடந்துள்ளார். அசைவின்றி ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்ததால், விமான நிலைய ஊழியர்கள் சந்கேமடைந்து, விமான நிலைய மருத்துவர்களை அழைத்து வந்துள்ளனர்.
அப்போது அவரை பரிசோதித்து பார்த்த போது, அவர் உயிரிழந்தை உறுதி செய்த மருத்துவர்கள், நடுவானில் வரும்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திருமணம் முடிந்து 2 மாதங்களில் கணவன் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, நான்கு ஆண்டுகளுக்கு பின்பு திரும்புவதால்,
அவரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மனைவி நிஷாராணி, அவரின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது.