தீயின் கொடூரத்திலிருந்து இருந்து தப்பியது எப்படி? சஹானாவின் பதைபதைக்கும் நிமிடங்கள்!!

671

கடந்த 11-ஆம் திகதி குரங்கனிக்கு டிரக்கிங் சென்ற 40 பேர் காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டார்கள், இந்த தீயில் கருகி இதுவரை 16 பேர் இறந்துள்ளார்கள்.

காட்டில் இருந்து பலா், தீயில் சிக்கி, உடல் முழுக்க 80 சதவீதத்திற்கும் மேலான தீக்காயங்களுடன் இருந்தார்கள்.

கோடை காலமாக இருந்ததாலும், சுற்றுப்புறம் அனைத்தும் தீயால் வெந்ததால், அந்த மலையே மிகவும் கனலாக மாறியது.

இந்நிலையில், குரங்கனி தீவிபத்தில் இருந்து தப்பிய சஹானா என்ற மாணவி தீயின் கொடூர நாக்கிலிருந்து தப்பியது எப்படி என்பது குறித்து விவரித்துள்ளார்.

நான் பொருளாதார துறையில் படிக்கிறேன், எனக்கு மலை ஏறுவது என்பது மிகவும் பிடிக்கும். இது எனது இரண்டாவது மலைப்பயிற்சி ஆகும்.

காட்டில் தீ பிடித்து எரியும் போது மணி இரண்டரை இருக்கும், மரத்தின் அடியில் அமர்ந்து நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, காற்று அனலா அடித்தது.

புகையா வந்தது, அப்போது திடீர்னு எங்க ஒருங்கிணைப்பாளர், காட்டில் நெருப்புப் பிடிச்சிருச்சு. எல்லாரும் ஓடுங்கன்னு சத்தம் எழுப்பினார். எல்லாரும் பாதி சாப்பாட்டில் எழுந்து ஓட ஆரம்பித்தோம்.

எந்த பாதையில் ஓடுகிறோம் என தெரியாமல், உயிரை காப்பாற்றிக்கொள்ளும் அச்சத்தில் கண்ணுக்கு தெரிந்த பாதையை நோக்கி ஒடினோம், பாதி வழியிலேயே தீயின் தாக்கம் அதிகரித்ததால் என்னோடு வந்தவர்கள் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்போது, செங்குத்தான மலையில் எனக்கு முன் சென்றவர்கள் சறுக்கியபடியே சென்றார்கள், அவர்களை பின்தொடர்ந்து நானும் சறுக்கி கொண்டே சென்றேன்.

உயிர் தப்பிக்க நெருப்புக்கு எதிர் திசையில் ஓடிக்கிட்டிருந்தோம். எவ்ளோ நேரம் அப்படி ஓடினோம்னு தெரியலை. யாரோ எங்களைச் சத்தமா கூப்பிடும் சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையில் திரும்பி பார்த்தால், ஊர் மக்களும், வனத்துறை அதிகாரிகளும் இருந்தார்கள்,அவர்களை பார்த்தவுடன் தான் உயிரே வந்தது என கூறியுள்ளார்.