தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஒருவர் வாயில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பரிதாபமாக இறந்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று போராட்டம் 100-வது நாளை எட்டியதால், பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்வேறு கிராம மக்கள் ஏராளமானோர் இன்று காலை பேரணியாக சென்றனர்.
அப்போது பேரணியாக சென்ற பொதுமக்களை பொலிசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து முன்னேறினர்.
இதனால் பொலிசார் திடீரென்று பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால், தற்போது வரை 10 பேர் பலியாகியிருப்பதாகவும், அதில் சிலரின் தகவலும் வெளியாகியுள்ளது.
மேட்டுப்பட்டி கிளாஸ்ட்ன (40), தூத்துக்குடி கந்தையா (55), குறுக்குசாலை கிராமம் தமிழரசன்(28), ஆசிரியர் காலனி சண்முகம் (40), தாமோதர் நகர் மணிராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இறந்தவரின் 3 பேரின் அடையாளம் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் இது போன்ற துப்பாக்கிச் சூசு சம்பவமே நடந்தது இல்லை எனவும், ஒரே நாளில் 8 பேரை பொலிசார் சுட்டு கொலை செய்துள்ளது தமிழகம் முழுவதிலும் பதற்றம் நிலவி வருகிறது.
மேலும் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெரும்பாலானோர் அப்பாவிகள் என்று இறந்தவர்களின் உறவினர்கள் கதறியுள்ளனர்.
இதில் உயிரிழந்த வெனிஸா என்ற மாணவி வாயில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.