தேவதாசி ஆக்கிவிடுவோம் என மகளை மி.ரட்டிய பெற்றோர் : வீட்டை விட்டு ஓடிய இளம் பெண்!!

465

கர்நாடகாவில்..

இந்திய மாநிலம் கர்நாடகாவில், திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தேவதாசி ஆக்கி கோவிலில் விட்டு விடுவதாக பெற்றோர் மி.ர.ட்.டி.ய.தா.ல் இளம்பெண் வீட்டை விட்டு ஓ.டிய சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சிஞ்சோடி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 20 வயதாகும் பெண்ணை அவரது பெற்றோர், மூத்த மகளின் கணவரையே திருமணம் செய்துக்கொள்ளுமாறு க.ட்டாயப்படுத்தியுள்ளனர்.

பெற்றோரின் இந்த முடிவு இளம்பெண்ணுக்கு பிடிக்கவில்லை. எனவே திருமணம் வேண்டாமென மறுத்துள்ளார். ஆனால், திருமணம் செய்யாவிட்டால் தேவதாசியாக்கி கோவிலில் விட்டு விடுவதாக அவரது பெற்றோர் மி.ர.ட்டியுள்ளனர். பீ.தி.யடைந்த இளம்பெண் வீட்டை விட்டு ஓ.டிவிட்டார்.

அங்கிருந்து யாத்கிர் மாவட்டத்தில் சுர்பூரில் உள்ள தன் உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்தார். இதை தெரிந்து கொண்ட பெற்றோர், அங்கு வந்து மக்களை அழைத்துச்செல்ல முயற்சித்தனர். அனால் அவர் செல்ல மறுத்தார்.

இந்த நிலையில், தகவலறிந்து அங்கு வந்த மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலக வக்கீல், இளம்பெண்ணின் பெற்றோரை எ.ச்சரித்து, ஆதிஜாம்பவா கல்விச் சங்கம் நடத்தும் மகளிர் மறுவாழ்வு மையத்தில் இளம்பெண்ணை ஒப்படைத்தார்.

பின்பு, அப்பெண் தனது பெற்றோர் மீது பொலிஸில் பு.கா.ர் செய்தார். அவர் மீது பெற்றோரும் பதில் புகார் அளித்தனர். புகாரில், தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில், பணத்தை தி.ருடிக்கொண்டு வீட்டை விட்ட வெளியேறியதாகவும் பெற்றோர் குறிப்பிட்டிருந்தனர்.

பிறகு, இளம்பெண்ணையும் அவரது பெற்றோரையும் பொலிஸார் வரவழைத்து விசாரித்தனர். மகளை தங்களிடம் ஒப்படைக்கும்படி பெற்றோர் கோரினர். ஆனால் மகள் சம்மதிக்காததுடன், பா.துகாப்பும் கேட்டதால், ராய்ச்சூரில் இருக்கும் Mahila Santwana Kendra எனும் மகளிர் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டார்.

”அவருக்கு கவுன்சலிங் அளிக்கப்படுகிறது. அவசியம் ஏற்பட்டால், சுய தொழில் துவங்க நிதியுதவி வழங்கப்படும். மேலும் அவருக்கு விருப்பமானவருடன் திருமணம் செய்து வைக்கப்படும்” என்று ராய்ச்சூர் துணை ஆணையர் ஆர்.வெங்கடேஷ் குமார் கூறினார்.

தேவதாசி முறை, சட்டத்தால் த.டைசெய்யப்பட்ட போதிலும், இந்தியாவில் சில பகுதிகளில் இன்னும் ஒரு சில இடங்களில் இருந்துவருகிறது என்பதை இச்சம்பவம் நினைவூட்டுகிறது.