திருநங்கைக்கு பாகிஸ்தான் நாட்டில் புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் திருநங்கைகளுக்கு பல்வேறு வசதி வாய்ப்புகள் செய்து தரப்பட்டு வருகிறது.
சமீபத்தில் அந்நாட்டு செனட் அவையில், திருநங்கைகள் தங்கள் பாலின அடையாளத்தை முடிவு செய்யும் அதிகாரம், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை உயர்த்திக் கொள்ள மசோதா ஒன்றை நிறைவேற்றியது.
இந்த சூழலில் பாகிஸ்தானின் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிக்க திருநங்கை ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது பெயர் மாவியா மாலிக். இவர் கோஹினூர் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டின் செயல்பாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் திருநங்கை மாவியா மாலிக்கிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.