தோல்வியில் முடிந்த தமிழனின் முதல் செயற்கைக்கோள் திட்டம் : இஸ்ரோ அறிவிப்பு!!

625

கடந்த 29ம் திகதி விண்வெளியில் ஏவப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் – ஜிஎஸ்எல்வி F08 ராக்கெட் தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது

தொலைத் தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6ஏ ரக அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்தது.

அதை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து கடந்த 29-ம் திகதி மாலை 4.56 மணியளவில் ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் இந்த ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இதன் ஆயுள்காலம் மற்றும் பணித்திறன் 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், விண்ணில் நிறுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோளின் இரண்டாம் படிநிலை இயக்கம் 31-ம் திகதி வெற்றிகரமாக நிறைவேறியது.

மூன்றாவது மற்றும் இறுதிகட்ட படிநிலை இன்று தொடங்கவிருந்த நிலையில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது.

இழந்த இணைப்பை மீண்டும் ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுவீச்சில் செயலாற்றி வந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை முதல் ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளில் இருந்து எந்தவிதமான சிக்னலும் கட்டுப்பாட்டு அறைக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் தகவல் தொடர்பை இழந்துவிட்டதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது;

வெள்ளிக்கிழமை அன்று பூமியின் முதல் சுற்றுவட்டப்பாதையை முடித்த செயற்கைக்கோள், 2ம் வட்டப்பாதைக்குள் நுழைந்தது. அந்நேரம் வரையில், செயற்கைக்கோளில் இருக்கும் எல்ஏஎம் எனும் மோட்டார் நன்றாக செயல்பாட்டில் இருந்தது.

பின்னர், 2ம் வட்டப்பாதை தொடங்கி 51 நிமிடங்கள் வரை இருந்த சிக்னல், அதன் பின்பு தகவல் தொடர்பை இழந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், தோல்விக்கான காரணம் குறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், இது வரை அதற்கான காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை.

தமிழகத்தை சேர்ந்த சிவன் இஸ்ரோவின் தலைவராக பொருப்பேற்ற பின்னர் செயல்படுத்தப்பட்ட முதல் திட்டம் இந்த ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் ஆகும். சிவன் தலைமையில் உருவாக்கப்பட்ட முதல் திட்டப்பணியே தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்