தோழி ஊருக்கு சென்றதால் மன விரக்தியடைந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

456

ஜார்கண்ட்…

ஜார்கண்ட் மாநிலம் துருவா மாவட்டம் துருவாரஞ்சி ஆதார்ஷ் நகரை சேர்ந்தவர் விகாஷ் குமார். இவரது மனைவி மஞ்சி குமார். இவர்களுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆகின்றன. கணவன் மனைவி 2 பேரும் ஓசூர் அடுத்த பாகலூர் அருகே சிச்சிருகானப்பள்ளியில் தங்கி இருந்தனர்.

விகாஷ்குமார் சிச்சிருகானப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், மஞ்சிகுமாரின் தோழி ஜார்க்கண்டில் இருந்து பாகலூர் வந்தார்.

அங்கு சிச்சிருகானப்பள்ளியில் உள்ள மஞ்சிகுமாரின் வீட்டில் கடந்த 2 வாரங்களாக அவர் தங்கி இருந்தார். பின்னர் அவர் ஜார்க்கண்டிற்கு சென்று விட்டார்.

தோழியின் பிரிவை தாங்கி கொள்ள முடியாத மஞ்சிகுமார் மனமுடைந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பாகலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மஞ்சிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இது குறித்து ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

ஊரில் இருந்து வந்த தோழி மீண்டும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் மனமுடைந்ததாக கூறப்படும் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.