தோழியை காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்த பெண் : கடும் அதிர்ச்சியில் குடுப்பதினார்!!

338

இந்தியா….

இந்தியாவில் இரண்டு பெண்கள் திருமணம் செய்ய முடிவு செய்து, மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் பரோமிதா முகர்ஜி மற்றும் சுரபிமித்ரா. நெருங்கிய தோழிகளான இவர்கள் ஒன்றாக படித்து மருத்துவர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக இருந்தவர்கள் என்பதால், இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இருவரும் காதலிக்க துவங்கியுள்ளனர். ஒன்றாக நாக்பூரில் மருத்துவர்களாக பணியாற்றி வந்த இவர்கள், ஒரே வீட்டில் ஒன்றாக கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் இருவரும் ஓரின சேர்க்கையாளர்கள் என்பதை ஒளிவுமறைவின்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இதை சொல்வதில் எங்களுக்கு வெட்கம் இல்லை. எங்களுக்குள் நல்ல உறவு இருப்பதை கடந்த 2013-ஆம் ஆண்டே எனது தந்தையிடம் சொல்லி விட்டேன். சமீபத்தில்தான் எனது தாயாரிடம் இதை தெரிவித்தேன்.

இதைக் கேட்டு, முதலில் எனது தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார். பிறகு எனது தந்தை மூலம் அவருக்கு புரிய வைத்தேன். இப்போது அவர்கள் இருவரும் நான் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று எனது திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர்.

வாழ்நாள் முழுவதும் நாங்கள் சேர்ந்து இருப்போம். இந்த ஆண்டுக்குள் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். அல்லது அடுத்த ஆண்டு நிச்சயம் எங்கள் திருமணம் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவித்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 29-ஆம் திகதி நாக்பூரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.