நகை பணத்திற்கு பதில் வரதட்சனையாக மணமகன் கேட்ட பொருள்…ஆச்சிரியத்தில் ஊர்மக்கள்!!

508

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் உள்ள பாலா பகதர்பூர் கிராமத்தை சேர்ந்த சரோஜ்காந்த் பிஸ்வால் (33) என்னும் ஆசிரியருக்கும், அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை ராஷ்மிரேகாவுக்கும் திருமணம் நிச்சயமானது.

திருமணத்திற்கு முன்பாக சரோஜ்காந்த் மணப்பெண்ணின் தந்தையிடம் எனக்கு வரதட்சணையாக பணம், நகை வேண்டாம். அதற்குப் பதிலாக மரக்கன்றுகளை பரிசாகக் கொடுங்கள் என கேட்டிருக்கிறார்.

இதை மணமகளின் தந்தையும் ஒப்புக்கொள்ள,கடந்த 22-ந்தேதி சரோஜ் காந்த் பிஸ்வால்-ராஷ்மிரேகா திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மணமகளின் தந்தை மரக்கன்றுகளை வரதட்சணையாக அளிக்க, அதை மணமக்கள் தங்களை வாழ்த்த வந்தவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.

நகை, பணத்திற்குப் பதிலாக மரக்கன்றுகளை இளைஞர் வரதட்சணையாகப் பெற்ற சம்பவம், அப்பகுதி மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது