சென்னை…
சென்னை முகப்பேர் கிழக்கு வளையாபதி சாலையில், பிரித்தம் குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 26ம்தேதி இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர், 3 சவரன் நகையை பார்த்துவிட்டு தனக்கு பிடித்துள்ளதாகவும், அதனை வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்பின் தன்னிடம் கையில் பணம் இல்லை எனவும் அதனால், அருகில் உள்ள ஏடிஎம்மிற்கு சென்று பணம் எடுத்து வருவதாகவும் கூறிவிட்டு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், சந்தேகமடைந்த கடை ஊழியர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த பெண் 3 சவரன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது.
உடனடியாக இதுகுறித்து கடை உரிமையாளர் பிரித்தம் குமார், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் கடைக்கு வந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, அது பழைய குற்றவாளியான பொழிச்சலூரைச் சேர்ந்த தாட்சாயினி என்பது தெரியவந்தது. இதையடுத்து, தட்சாயினியையும், திருட்டுக்கு உடைந்தையாக இருந்த அவரது கணவர் சந்திரசேகரையும் போலீசார் கைது செய்தனர்.