நடக்கவும் முடியாது, பேசவும் முடியாது.. கொரோனா தடுப்பூசி செலுத்திய மறுநாள் நேர்ந்த அற்புதம் : வியக்க வைக்கும் சம்பவம்!!

564

இந்தியா…

இந்தியாவில் நடக்கமுடியாத மற்றும் பேசும் திறனை இழந்த ஒருவர் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தி கொண்ட மறுநாள் பேசவும், நடக்கவும் கூடிய திறனை பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் போக்காரோவை சேர்ந்தவர் துலர்சந்த் முண்டா (55) என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சாலை விபத்து காரணமாக பேசவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி அங்கன்வாடி ஊழியர் ஒருவர் முண்டாவுக்கு கோவிஷீல்ட் முதல் தவணை தடுப்பூசி செலுத்தினார்.

மறுநாள் முண்டா எழுந்து நிற்கவும், வார்த்தைகளை பேசும் திறனையும் பெற்றுள்ளார்.

இதனால் சுகாதார அதிகாரிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். இது பற்றி மருத்துவர் கூறுகையில், இதனைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.

மருத்துவ குழு ஒன்றை அமைத்து அவரது மருத்துவ வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும். சில நாட்களில் பழைய நிலையிலிருந்து மீண்டால் அது பற்றி புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு தடுப்பூசியால் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார் என்பது நம்ப முடியாதது என கூறியுள்ளார்.