நிதி அகர்வால்…
பாலிவுட் சினிமாவிக் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர், நடிகர் ஜெயம் ரவியின் பூமி படத்தில், ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார்.
அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். இதனிடையே சமீபகாலமாக நடிகர் சிம்புவுடன் நிதி அகர்வால் காதலில் இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
சிம்பு நடிக்கும் கதைகளை கூட நிதி அகர்வால் தான் தேர்வு செய்கிறார் என்றளவுக்கு தகவல்கள் வெளிவந்தன. ஆனால், இது குறித்து இருவருமே இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், நிதி அகர்வால் நடித்துள்ள ‘ஹீரோ’ தெலுங்குப் படத்துக்கான விளம்பரப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறன்றன. இந்த படத்தின் விழாவில் பேசிய அவர், தன்னை பற்றிய வதந்திகளுக்கு நிதி அகர்வால் விளக்கமளித்துள்ளார்.
நம்மைப் பற்றி எப்போதும் ஏதாவது எழுதப்பட்டுக் கொண்டே தான் இருக்கும். அதில் சில விஷயங்கள் உண்மையாக இருக்கலாம், சில உண்மைக்கு மாறானவையும் இருக்கலாம். எது உண்மை?, எது உண்மை இல்லை? என்பது நம் பெற்றோருக்கு தெரிவது மட்டும்தான் முக்கியம்.
மக்கள் பேசுபவை எல்லாம் வெறும் ஹைஸ்கூல் டிராமா போன்றவைதான். மேலும், இறுதியாக நம்முடைய வேலைதான் அவர்களுக்கு பதில் சொல்லவேண்டும். அப்படி நடப்பதற்காக நான் காத்திருக்கிறேன் என நிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.