நடிகர் விஷ்ணு விஷாலின் முதல் மனைவி இந்த பிரபல நடிகரின் மகளா? இது எத்தனை பேருக்கு தெரியும்!!

365

விஷ்ணு விஷால்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.

ஆரம்பத்தில் இவருக்கு சினிமாவில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் அடுத்தடுத்து தரமான படங்களாக கொடுத்து இப்போது வெற்றியின் பாதையில் உள்ளார்.

பட செய்தியை தாண்டி அண்மையில் இவரது சொந்த வாழ்க்கை குறித்து தகவல் வந்தது. அதாவது விஷ்ணு விஷாலுக்கும் பேட்மிட்டன் வீராங்கனை கட்டா ஜுவாலாவுக்கும் ஹைதராபாத்தில் இரண்டாவது திருமணம் நடந்தது.

அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

விஷ்ணு விஷால் தனது முதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்ததை கூட மிகவும் ரகசியமாக வைத்து பின்பே அறிவித்தார். இந்த ரஜினி யார் என்று தெரியுமா, அவர் பிரபல நடிகரான கே.என். நட்ராஜன் அவர்களின் மகளாம்.

நட்ராஜன், நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். தற்போது நட்ராஜன் அவர்கள் நிறைய சீரியல்களில் நடித்து வருகிறார்.

இப்போது அவர் ரோஜா மற்றும் வேலைக்காரன் சீரியல்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.