நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு ரகசிய திருமணமா?

658

ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் ஒன்று அவருக்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சல்மான் கானின் ‘பாரத்’ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் .

தற்போது 35 வயதாகும் பிரியங்கா சோப்ராவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த புகைப்படத்தில் பிரியங்கா தனது கையில் தாலி போன்ற ஒன்றை கட்டியிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள், அவருக்கு ரகசியமாக திருமணமாகிவிட்டதாக பேச ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், இது குறித்து பிரியங்கா சோப்ரா இன்னும் கருத்து கூறவில்லை. எனினும் அவர், ‘எனக்கு நிச்சயம் திருமணம் நடக்கும். நல்ல மாப்பிள்ளை கிடைத்தவுடன் திருமணம் செய்வேன். நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது’ என்று முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாகவே பிரியாங்காவின் இந்த புகைப்படம் வைரலாகும் பேச்சாக மாறத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.