பிக்பாஸ் காதல் ஜோடியின் நிச்சயதார்த்தம் நடுவானில் பறக்கும் பலூனில் நடைபெற்றது.
பிக்ஸ்பாஸ் என்ற நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடைபெற்று வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவதற்குள் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு காதல் ஜோடி உருவாகி விடுகிறது.
அப்படி இந்தி பிக்பாஸ் 11வது சீசனில் பங்கேற்றவர்கள் ஹீனா கான் மற்றும் ராக்கி ஜெய்ஸ்வால். இந்த நிகழ்ச்சியின் போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. தற்போது இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இதன் முதற்கட்டமாக இவர்களுக்கு நேற்று துபாயில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிச்சயதார்த்தம் வித்தியாசமான முறையில் நடுவானில் நடந்தது.
ஹீனாவை ஹாட் ஏர் பலூனில் அழைத்து சென்ற ராக்கி நடுவானில் அவரிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு மோதிரத்தை காட்டி ப்ரொபோஸ் செய்துள்ளார்.
இதை ராக்கி பல நாட்களாக பிளான் செய்து வந்தாராம். பலூனில் இருந்து கீழே இறங்கியது ஹீனா கான் சந்தோசத்தில் துள்ளி குதித்துள்ளார்.