கர்நாடகா..
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பரின் மனைவியை இளைஞன் திருமணம் செய்து கொண்டது பாராட்டுகளை பெற்று வருகிறது.
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேத்தன் குமார்(வயது 41), இவருக்கும் அம்பிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த சேத்தன் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மனமுடைந்து போன அம்பிகா, தற்கொலைக்கு முயன்றார், இதிலிருந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சேத்தன் குமாரின் நண்பர் லோகேஷ் காப்பாற்றினர். மேலும் சில நாட்களில் லோகேஷ், அம்பிகாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.
இதற்கு அம்பிகாவும் சம்மதம் தெரிவிக்கவே, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ளது.
கொரோனாவுக்கு பலியான நண்பரின் மனைவியை மறுமணமாக திருமணம் செய்த லோகேசின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.