சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நயன்தாரா.
இவர் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக மாறிவிட்டார். தற்போது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சினிமாவில் பல நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இது தொடர்பாக பேட்டியிலும் பேசியுள்ளனர். இந்த நிலையில் நயன்தாரா கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், அட்ஜஸ்மென்ட் செய்தால் தன்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாக இயக்குனர் ஒருவர் கூறினார், அப்படிபட்ட வாய்ப்பு தனக்கு வேண்டாம் என்று உதறி தள்ளியதாகவும் நயன்தாரா தெரிவித்துள்ளார்.