நர்சிங் கல்லூரி மாணவிக்கு கழிவறையில் நேர்ந்த விபரீதம் : சிக்கிய உருக்கமான கடிதம்!!

971

வேதாரண்யம்….

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனை களையும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் மன அழுத்தத்தை போக்கும் வகையில் வகுப்புக்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இருந்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா பெருமழை கிராமத்தில் வசித்து வருபவர் இளையராஜா. இவருடைய மகள் 18 வயது இந்துஜா

இவர், வேதாரண்யம் அருகே கடிநெல்வயல் பகுதியில் உள்ள நவஜீவன் கமிட்டி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்துஜா வீட்டின் ஏழ்மை காரணமாக பயிற்சி கல்லூரியில் உள்ள கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ள அறையில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் இந்துஜா நேற்று முன்தினம் பிற்பகல் உணவு அருந்திய பிறகு கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. அவரை தேடியதில் இந்துஜா கழிவறையில் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் இந்துஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் மாணவி எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.

அந்த கடிதத்தில் ‘அப்பா… நீங்கள் மதுகுடிக்க வேண்டாம். அம்மாவை அடிக்காதீர்கள். இந்தப் படிப்பும், தனிமையில் இருப்பதும் பிடிக்கவில்லை. என்னென்னவோ செய்யவேண்டும் என நினைத்தேன். அதையெல்லாம் அண்ணன் செய்வான். என்னை மன்னித்து விடுங்கள்’ என உருக்கமான கடிதம் ஒன்றை தனது தந்தைக்கு எழுதியுள்ளார்.

இந்த நிலையில் மாணவியின் சாவில் சதேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரண்டு மருத்துவர்கள் மூலம் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப்பட்ட பிறகு ணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்லூரிக்கு படிக்க சென்ற மாணவி கழிவறையில் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.