நள்ளிரவில் இளம் ஜோடிக்கு அரங்கேறிய பயங்கரம்!!

324

அம்பத்தூர்…

அம்பத்தூர் ரயில் நிலையம், 3-வது பிளாட்பாரம் அருகில் விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் இன்று ஒரு வாலிபர், இளம்பெண் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் அம்பத்தூர் ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அம்பத்தூர் ரயில்வே அதிகாரிகள் ஆவடி ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆவடி ரயில்வே சப்- இன்ஸ்பெக்டர் கமலகண்ணன் தலைமையில் விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர், புகாரின் அடிப்படையில் ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் இறந்தவர்கள் திருவண்ணாமலை, போளூர் தாலுகா முக்குரும்பை கிராமத்தைச் சார்ந்த ஜெயக்குமார் (25) என்பதும், ஆந்திரா மாநிலம், விஜயநகரம் பகுதியைச் சார்ந்த சரண்யாஶ்ரீ (19) என்பதும் தெரியவந்தது. இதில் ஜெயக்குமார் அம்பத்தூரை அடுத்த பாடி பகுதியில் தங்கியிருந்து தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

மேலும், சரண்யாஸ்ரீ டிப்ளமோ படித்து முடித்து விட்டு பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பயிற்றுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர், பாடி, படவட்டம்மன் கோயில் 2-வது தெருவில் வசித்து வந்தார்.

இதற்கிடையில், சமீபத்தில் ஜெயகுமார், சரண்யா இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். மேலும், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு எடுத்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 18-ந்தேதி சரண்யாஸ்ரீயை பார்க்க அவரது பெற்றோர்கள் சென்னைக்கு வந்து உள்ளனர். அப்போது, ஜெயக்குமார் தனது பெற்றோருடன் சரண்யாஸ்ரீயின் பெற்றோரை வந்து சந்தித்து உள்ளனர்.

மேலும், அவர்கள் ஜெயக்குமாருக்கு, சரண்யாஸ்ரீயை திருமணம் செய்து வைக்க சம்மதம் கேட்டு உள்ளனர்.

ஆனால், அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, ஜெயக்குமார் தனது பெற்றோருடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில், நேற்று காலை சரண்யாஸ்ரீ பாடியில் உள்ள வீட்டில் இருந்து மாயமானார். இதனையடுத்து அவரது தாய் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். இதற்கிடையில், இன்று சரண்யாஸ்ரீ, ஜெயக்குமார் இருவரும் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்.

பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால், காதலன் ஜெயக்குமாருடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் சரண்யாஸ்ரீ. பின்னர், அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, அம்பத்தூர் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.