நள்ளிரவில் கழிப்பறைக்கு சென்ற இளம்பெண் திடீரென பேசும் திறனை இழந்தது எப்படி? அதிர்ச்சியடைய வைத்த அந்த காட்சி!!

978

இளம்பெண்..

கேரளாவில் இளம் பெண் நள்ளிரவில் கழிப்பறைக்கு சென்ற போது முக்காடு போட்ட மர்ம உருவத்தை பார்த்த நிலையில் அதிர்ச்சியில் பேசும் திறனை இழந்துள்ளார்.

கோழிக்கோட்டை சேர்ந்தவர் அஞ்சு ஷோபிஷ் (27). இவர் அங்குள்ள Chethukadavu Rajiv Gandhi காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில் தனது வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் அஞ்சு தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் வீட்டு கழிப்பறையில் உள்ள குழாயில் இருந்து தண்ணீர் சொட்டும் சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று அஞ்சு பார்த்தார்.

அப்போது பக்கத்தில் இருந்த கல்லூரி சுவர் அருகில் தலையில் முக்காடு போட்டபடி கருப்பு நிறத்தில் நபர் ஒருவர் நின்றிருந்ததோடு அஞ்சுவையே முறைத்து பார்த்துள்ளான்.

பின்னர் அங்கிருந்து அவன் சென்றுள்ளார், அவனை நள்ளிரவில் பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன அஞ்சு பேசும் திறனை இழந்துள்ளார்.

இது போன்ற கருப்பு மனிதன் அந்த பகுதியில் அடிக்கடி நடமாடுவது தெரியவந்துள்ளது. தற்போது அஞ்சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் கூறுகையில், அஞ்சு தற்காலிகமாக தான் பேசும் திறனை இழந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். அவரை அதிர்ச்சியில் இருந்து மீட்க முயன்று வருகிறோம் என கூறியுள்ளார் இதனிடையில் கருப்பு மனிதன் என அந்த பகுதி மக்களால் அழைக்கப்படும் நபரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.