நள்ளிரவில் காதலியை திருமணம் செய்து கொண்ட பிரபல இசையமைப்பாளர்: காரணம் இதுதான்!

1273

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷமய்யா தனது காதலியை நள்ளிரவில் திருமணம் செய்துள்ளார்.கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஹிமேஷ் ரேஷமய்யா.

அவர் தனது நீண்ட நாள் காதலியான சோனியா கபூரை மும்பையில் உள்ள தனது வீட்டில் வைத்து திருமணம் செய்துள்ளார்.இந்த திருமணம் நள்ளிரவில் நடைபெற்றுள்ளது.

இரவு 1.30 மணிக்கு தான் நல்ல நேரம் என்று ஜோதிடர் தெரிவித்த நிலையில் இருவீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் அந்த நேரத்தில் திருமணம் நடந்துள்ளது.ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஹிமேஷுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.