நள்ளிரவில்..
கண்டியில் மூவர் உ யிரிழக்க காரணமாக இருந்த வீட்டின் முதலாவது உரிமையாளர் முன்னாள் நிலமே என தெரியவந்துள்ளது. தற்போதைய உரிமையாளராக அனுர லெவ்கே என்பவரே நிலமேயாக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னரே குறித்த உரிமையாளர் தனது குடும்பத்தினரையும் நாயையும் கா ப்பாற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. எனினும் உரிமையாளர் கருத்து வெளியிடும் போது,
நாங்கள் டீ.வி பார்த்துவிட்டு தூங்க சென்றோம். அப்போது நேரம் அதிகாலை ஒரு மணியாகும். அதிகாலை திடீரென பாரிய சத்தம் ஒன்று கேட்டது. சத்தம் எங்கிருந்து வந்ததென எங்களால் யோசிக்க முடியாமல் போனது. அப்போது தெற்கு பகுதியில் உள்ள வீட்டில் உள்ளவர்கள். டோர்ச் அடித்து எங்களை கூப்பிட்டார்கள்.
அத்துடன் கீழ் உள்ள கொன்கிரீட் உடைவது போன்று தெரிவதாக கூறினார்கள். இதன் போது தரை இழுப்படுவது போன்று உணர முடிந்தது. இதன் போது வெளியே வாருங்கள் என மகள் கூச்சலிட்டார். மகன் வீட்டில் இருந்து நாயை எடுத்துக் கொண்டார்.
நான் வெளியே செல்லும் போது வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் நாயுடன், மகனும் மனைவியும் காரில் ஏரி சற்று தூரமாக சென்று நிறுத்தியிருந்தார்கள்.
நாங்கள் காருக்குள் சென்று சிறிது நேரத்தில் கட்டடம் உடைந்து விழுந்து விட்டது. ஏனையவர்களுக்கு தெளிவுப்படுத்த நேரம் போதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் அவர்கள் வீட்டில் இருந்து செல்லும் போது நேரம் ஒரு மணி எனவும் சம்பவம் 5 மணிக்கே இடம்பெற்றுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது. குறித்த உரிமையாளர் நினைத்திருந்தால் இந்த மூன்று உ யிரையும் கா ப்பாற்றியிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.