நான் கு.த்.திக்கிட்டு செத்துருவேன்: கட்டிலைச் சுற்றி கதறியழுத மீராமிதுன்!! பரபரப்பு காட்சி…!

819

மீரா மிதுன்…….

நடிகை மீரா மிதுன் தன்னை கைது செய்ய வந்த பொலிசாரிடமிருந்து தப்பிக்க கட்டிலைச் சுற்றி ஓடி ஒடி கதறி அழுதுள்ள காட்சி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாகவும், அவதூறாகவும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தனது தேவையற்ற பேச்சுக்காளால் அதிகமான வெறுப்பினை சம்பாதித்ததோடு, பிரபலங்கள் அரசியல்வாதிகள் என அனைவரையும் சரமாரியாக பேசி வந்தார்.

இவர் கடந்த 2016ம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர். ஆனால் குறித்த பட்டத்தினை மோசடி செய்து பெற்றதாக இந்த பட்டம் பறிக்கப்பட்டது.

தமிழில் சில படங்களில் நடித்த மீராமிதுன், பின்பு படவாய்ப்பு குறைந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கினார். அடிக்கடி வீடியோ வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்திய இவர் சமீபத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூராக பேசி காணொளி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கு வழக்கு தொடரப்பட்ட நிலையில், இன்று பொலிசார் இவரை கைது செய்துள்ளனர். தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று சவால் விடுத்த இவர், கைது செய்யும் போது கதறிய காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

கைது செய்யப்பட்ட போது தனது செல்போனை எடுத்து ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். குறித்த காட்சியில் கட்டிலை சுற்றி சுற்றி வந்து, ஆவேசமாகவும், கதறிக்கொண்டே பேசியும் வெளியிட்டிருக்கிறார்.

குறித்த வீடியோவில், ”இவனுங்க எல்லாரும் என்னை டார்ச்சர் பண்ணுறாங்க. முதலமைச்சர் அவர்களே ஒரு பொண்ணுக்கு இப்படித்தான் டார்ச்சர் கொடுக்கணுமா? போலீஸ்னா அட்ராசிட்டி பண்ணுவீங்கள? என் போனை தர முடியாது. நான் குத்திக்கிட்டு செத்துருவேன்.

என் மேல ஒரு கை பட்டுச்சுன்னா என்னை கொலை பண்ணிக்கிட்டு செத்துருவேன். முதலமைச்சர் அவர்களே பிரதமர் அவர்களே இந்த தமிழ்நாடு பொலிசார் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுறாங்க”என்று கதறியுள்ளார்.