நான்கு ஆண்டுகளாக நாடுகட த்தப்படும் அ ச்சத்தில் அவுஸ்திரேலியாவில் பிறந்த சிறுவன்!!

394

சிறுவன்:

அவுஸ்திரேலியாவில் வங்கதேச பெற்றோருக்கு பிறந்த சிறுவன், கடந்த நான்கு ஆண்டுகளாக நாடுக டத்தப்படும் அ ச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் நிலையில், நாடுக டத்தலை தடுக்கக்கோரி அவுஸ்திரேலிய அரசுக்கு சிறுவனின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

2012ம் ஆண்டு வங்கதேசத்தில் மெஹதி ஹசன் பூஹூயன் என்பவருக்கும் சுல்தானாவுக்கும் திருமணம் நடந்த பின்னர், பூஹுயன் அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் இருந்த பொழுது அவர்களுக்கு அடியன் பூஹூயன் என்ற குழந்தை பிறந்துள்ளது.

அக்குழந்தை பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பது பிறந்து சில மாதங்களில் அறியப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற மெஹதி ஹசன் பூஹூயனுக்கு நிரந்தர திறன்வாய்ந்தவர்களுக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

சிறுவனுக்கு உள்ள உடல்சார்ந்த குறைப்பாடு, அவுஸ்திரேலியாவுக்கு பாரமாக இருக்கக்கூடும் என அவுஸ்திரேலியா கருதும் நிலையில், வங்கதேசத்திற்கு நாடுக டத்தப்படுவோம் என்ற அ ச்சத்திலேயே கடந்த நான்கு ஆண்டுகளாக சிறுவனின் குடும்பம் வாழ்ந்து வருகின்றது.

வழக்கமான மழலையர் பள்ளியில் கல்வி கற்கும் தனது மகனுக்கு சிறிய அளவிலான உதவி மட்டுமே தேவைப்படுகிறது என்கிறார் சிறுவனின் தந்தை பூஹூயன்.

“அவனது நிலை நன்றாக உள்ளது. அவனால் ஓட முடியும், படிக்க மற்றும் எழுத முடியும்,” எனக் கூறியிருக்கிறார் பூஹூயன்.

நிராகரிக்கப்பட்ட விசா தொடர்பாக நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்ட நிலையில், 2018ம் ஆண்டு இறுதியில் தீர்ப்பாயமும் குடிவரவுத்துறை முடிவினையே உறுதிச்செய்திருக்கிறது.

இச்சூழலில், அவுஸ்திரேலியாவில் வாழ் வேண்டும் என்ற நம்பிக்கையை இழக்காத பூஹூயன், அமைச்சரின் தலையீட்டைக் கோரியிருக்கிறார்.

இந்த விவகாரம் தற்போது சுங்கம் மற்றும் சமூகப் பா துகாப்பு தொடர்பான துணை அமைச்சர் ஜேஷன் வுட்டின் முடிவைச் சார்ந்து இருக்கிறது.