நிறுவனம் கொடுத்த சம்பளம்… அ திர்ச்சியடைந்த நபரின் பரிதாபநிலை!!

272

அமெரிக்கா………

வேலையை விட்டு நின்ற நபர் ஒருவருக்கு அவர் வேலை பார்த்த நிறுவனம் சம்பளம் வழங்கிய விதம் க டும் வைரலாகிவருகிறது.

அமெரிக்காவின் ஜோர்ஜா மாகாணத்தில் இருக்கும் வாகனம் பழுதுபார்க்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார் ஃப்ளாடென். இவர் சமீபத்தில் நிறுவனத்துடன் ஏற்பட்ட க ரு த்து வே று பாடு காரணமாக வேலையை விட்டு நின்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு கடைசியில் கொடுக்கப்படவேண்டிய சம்பள தொகை நிலுவையில் இருந்துள்ளது.

பலமுறை அவர் நிறுவனத்திடம் கேட்டும், அவர்கள் கொடுக்கவில்லை. இதனால் ஃப்ளாடென் இதுகுறித்து அமெரிக்க தொழிலாளர் துறையிடம் முறையிட்டுள்ளார். அவர்களும் இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட நிறுவனத்திடம் பேசி, மீதி தொகையை திருப்பி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்படி ஃப்ளாடென் வேலை பார்த்துவந்த நிறுவனத்தின் உரிமையாளர், ஃப்ளாடென்க்கு தரவேண்டிய 915 அமெரிக்க டாலரை, சென்ட்டாக அதாவது 91,500 சென்ட்டாக திருப்பி கொடுத்திருக்கிறார். இந்த நாணயங்களை எடுத்துவர வழியில்லாமல் ஃப்ளாடென் ஒரு சக்கர நாற்காலியில் வைத்து எடுத்துவந்துள்ளார்.

மேலும் அந்த நாணயங்களில் கிரீஸ் படிந்து இருப்பதாகவும், கிரீஸ் படிந்திருக்கும் நாணயங்களை, தான் ஒவ்வொரு நாணயமாக சுத்தம் செய்ய இரண்டு மணி நேரம் ஆகும் எனவும் ஃப்ளாடென் கூறியுள்ளார். இந்த ச ம்பவமானது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.