படப்பிடிப்பில் நடிகை பிரியங்கா சோப்ரா காயம்!!

859

ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்துள்ளார்.பிரியங்கா சோப்ரா, தற்போது அமெரிக்க தொலைக்காட்சி தொடரான ‘Quantico’-வில் நடித்து வருகிறார். இந்த தொடர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது.

இந்த தொடரில் அவர் அலெக்ஸ் பாரிஷ் எனும் FBI Agent ஆக நடித்து வருகிறார். இந்நிலையில், Quantico தொடரின் மூன்றாவது சீசனுக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ராவுக்கு விபத்து ஏற்பட்டது.

இதில், அவர் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, மூன்று வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.