பட்டதாரியான போதை கும்பலின் தலைவியின் பின்னணி குறித்து பகீர் தகவல்!!

318

சென்னை…

சென்னை கோடம்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு போதை கும்பல் ஒன்று பிடிபட்டது. அந்த கும்பலுக்கு விருதுநகரை சேர்ந்த பிபிஏ பட்டதாரியான ராஜலட்சுமி (22) என்ற பெண்தான் லீடர் என்பது போலீசை பகிர வைத்தது.

மேலும், போதை மாத்திரைகளை தவிர கரு கலைப்பு மாத்திரைகளும் விற்ற ராஜலட்சுமி அதற்கு டெஸ்ட் வைத்த பின்னணி படு பயங்கரம். முதலில் இந்த வழக்கில் கிஷோர் (23), கிஷோர்குமார் (20), பூங்குன்றன் (26), தேனி கோகுலன் (24), முத்துப்பாண்டி (23) மற்றும் ராராஜலட்சுமி என்ற மித்ரா என 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகரில் கல்வி படிப்பை முடித்த ராஜலட்சுமி சென்னைக்கு வந்து செல்போன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். மற்ற நேரங்களில் பப்ஜி விளையாடி வந்த ராஜலட்சுமிக்கு சென்னையை சேர்ந்த பூங்குன்றன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் சேர்ந்து ஆன்லைனில் பிசினஸ் செய்யலாம் என்ற நினைத்தபோது ராஜலட்சுமியின் ஹாஸ்டல் தோழி ஒருவர் கருக்கலைப்பு மாத்திரை வேண்டும் என ராஜலட்சுமியிடம் கேட்டுள்ளார். அதை ஆன்லைனில் தேடியபோதுதான் ‘இந்தியா மார்ட்’ என்னும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த டெல்லியை சேர்ந்த சச்சின் என்பவருடன் பழக்கமாகியுள்ளார்.

அவர் மூலமாக வாங்கிய கருக்கலைப்பு மாத்திரைகள் வெற்றிகரமாக வேலை செய்ததால் அடுத்தடுத்து அபார்ஷன் மாத்திரைகளை பெண்கள் ஹாஸ்டல் பக்கமும், தோழிகள் வட்டாரத்திலும் சப்ளை செய்து அதிக லாபம் ஈட்ட தொடங்கினார்.

அபார்ஷன் மாத்திரைகளுடன், தூக்கமின்மை, அசுர போதை, வலி நிவாரணி, நினைவாற்றல் பெறுக என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி பள்ளி, கல்லூரி மாணவர்களை டார்கெட் செய்து விற்று வந்துள்ளார் ராஜலட்சுமி. மேலும், பெண் என்பதால் எளிதாக பெண்கள் ஹாஸ்டலுக்குள் புகுந்து சப்ளை செய்ய ராஜலட்சுமிக்கு ஏதுவாக இருந்துள்ளது.

இருப்பினும், மற்ற இடங்களுக்கு சப்ளை செய்து வர ஆள் தேவைப்பட்டதால் தனது காதலனான ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துபாண்டியை சேர்த்துக்கொண்டார். அதன் பின்னர் பூங்குன்றனும், கோகுலும் சேர்ந்துள்ளனர்.

போதை தடுப்பு பிரிவில் ஆறு பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற நடவடிக்கை எடுத்தனர். அத்துடன், அவர்களிடம் இருந்து 7,125 மாத்திரைகள், 9 செல்போன்கள், 2 லேப்டாப்கள், 1 ஐபேட், 3 பைக்குகள், ரொக்கம் ரூ.4,41,300 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பேசிய சென்னை கூடுதல் காவலர் ஆணையர் கண்ணன், கைதான ஆறு பேரும் மிடில் கிளாசில் இருந்து வந்தவர்கள். இதில் ஓர் படித்த பட்டதாரி பெண் மூளையாக இருந்தது அதிர்ச்சி.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதை பொருட்களை விற்பனை செய்வதை கண்டால் பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கலாம் எனவும் புகார் கொடுப்பவரின் ரகசியம் காக்கப்படும் எனவும் அவர் கூறினார்.