டெல்லியில் பட்டப்பகலில் பொது இடத்தில் ராணுவ தளபதியின் மனைவி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது பரபரப்பாகியிருக்கிறது.
டெல்லி கண்டோன்ட்மென்ட் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி. அங்கு 30 வயது பெண் ஒருவர் பிஸியோதெரபி மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வந்த மர்ம நபர் ஒருவன் அப்பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு அதே வேகத்தில் தப்பியோடிவிட்டான்.
பரபரப்பான சாலையில் திடீரென நடந்த இந்த கொலையால் அங்குள்ள மக்கள் பதட்டமடைந்தனர். காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் விரைந்து வந்து அப்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பெண் பற்றிய முதல்கட்ட விசாரணையில்தான் அவர் ஒரு ராணுவ தளபதியின் மனைவி என்பது தெரிய வந்துள்ளது. விசாரணை மேலும் தொடர்கிறது.