பணப்பரிசு..
கண்டி, கொழும்பு பிரதான வீதியின் கடுகன்னாவ ஹேனாவல சந்திக்கு அருகில் வெள்ளை கோட்டின் மீது பயணித்த சிறுமி ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இதன்போது அவரது பல் ஒன்று உடைத்து விழுந்துள்ளது. அந்த பல்லை அவதானித்த கடுகன்னாவ பொலிஸ் அதிகாரிகள் இருவர் அதனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதனை உடனடியாக கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு பணப்பரிசு கிடைத்துள்ளது. போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கே இந்த பண பரிசு கிடைத்துள்ளது.
கம்பளை – கடுகன்னா பிரதேசத்தை சேர்ந்த எரங்கி மல்ஷா என்ற 15 வயதுடைய சிறுமி விபத்துக்குள்ளாகியுள்ளார். அதன் பின்னர் அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் இருவர் சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அத்துடன் சிறுமியின் பல் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மீண்டும் பற்கள் பொருத்தப்பட்டுள்ளது.