சாயிஷா..
நடிகர் ஆர்யாவை காதலித்து கரம்பிடித்த நடிகை சாயிஷா, திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன், ஆர்யா – சாயிஷா இணைந்து நடித்திருந்தனர்.
இந்தப் படத்தை அடுத்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். தமிழ் மட்டுமின்றி யுவரத்னா என்ற கன்னட படத்திலும் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடித்தார்.
அந்த படத்தில் மருத்துவ ஆசிரியராக நடித்திருப்பார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டி வரும் சாயிஷா அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரு ரெஸ்டாரன்டில் டெசர்ட் சாப்பிடுவதுமான புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.