பள்ளி மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன் : அதிர்ந்து போன பெற்றோர்!!

368

கடலூர்…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேலக்கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவன் கடந்த மாதம் 19ஆம் தேதி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மனோஜ் என்பவனும் அதே கிராமத்தைச் சேர்ந்த அவனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனை பிடித்து அருவருக்கத்தக்க வகையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அப்பொழுது சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த பொழுது சிறுவனை விட்டு விட்டு மூவரும் தப்பி ஓடியுள்ளனர்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை ராமநத்தம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மூன்றுபேரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த மூன்று பேரில் மனோஜ் என்பவன் வடகராம்பூண்டி பகுதியில் சுற்றித் திரிவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மனோஜை பிடித்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதனிடையே கைதான மனோஜ் மீது ஏற்கனவே மூதாட்டியை கொலை செய்த வழக்கு, கர்ப்பிணிப் பெண்ணை தாக்கிய வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.