பாலியல் தொல்லையால் சினிமாவை விட்டு ஓடினாரா ஓவியா? மீண்டும் சர்ச்சை!!

448

ஓவியா….

இந்த கொரோனா பரவல் காலகட்டத்தில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள், சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆகட்டும், வெள்ளித்திரை நட்சத்திரங்கள் உள்பட விளையாட்டை சேர்ந்த பிரபல வீரர்கள் போன்றோர் தங்களின் ரசிகர்களிடம் இணைப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக யூடியூப் சேனலில் பலவிதமான புதிய சிந்தனைகளுடன் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

அதுபோன்ற சிந்தனையுடன் நடிகர் பயில்வான் ரங்கநாதனும் தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். தப்போது பிக்பாஸ் பிரபலம் நடிகை ஓவியா பயில்வான் ரங்கநாதனின் வீடியோவை குறிப்பிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளுத்து வாங்கி உள்ளார்.

நடிகர் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் பக்கத்தில், ‘டார்ச்சர் கொடுத்ததால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள், முன்னணியில் இருந்த நட்சத்திர நடிகைகளின் மார்க்கெட் ஏன் குறைந்தது?’ என பயில்வான் ரங்கநாதன் சில நடிகைகளின் பெயர்களையும் கூறியுள்ளார்.

அதில் ஷெரின், ஓவியா, சுதா, சந்தியா, அபிராமி, பூஜா, சோனியாஅகர்வால் போன்றவர்கள் ஒரு காலத்தில் திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர். ஏன் தற்போது இல்லை என்ற காரணத்தை அவர் கூறுகிறாராம்.

தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல, அந்த வீடியோ பதிவில் அந்த நடிகைகளை குறித்து பயில்வான் ரங்கநாதன் தவறாக பேசியுள்ளார். அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் உடலமைப்பை பற்றியும் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, சில நடிகைகளின் சொந்த ஊரைப் பற்றியும் கூறியுள்ளார்.

சிங்களத்தி, கன்னடத்தி, தெலுங்கத்தி என ஒவ்வொருவரையும் தரக்குறைவாக பேசியுள்ளார். அத்துடன் கேட்பவரை அருவருப்பு படும்படி அந்த நடிகைகளின் முகத்தை பற்றியும், மார்பகங்கள் பற்றியும் இழிவாகப் பேசியுள்ளார்.

அதைக்கண்ட நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் இதை ஷேர் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது இது தான் பாலியல் இல்லாத சீண்டல்” என தெரிவித்துள்ளார்.

அதை செய்தது மட்டுமின்றி அதில் அவர் ‘womanrights’ என்ற ஹேஷ்டேக்கையும் உபயோகப்படுத்தி உள்ளார். தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை தட்டியெழுப்பியது போல் ஓவியா ட்விட் பக்கத்தில் பகிர்ந்து இருந்த நடிகர் பயில்வான் ரங்கநாதனின் வீடியோவை கண்டதும் ஓவியா ஆர்மி பொங்கி எழுந்தது.

திரையுலகிலிருந்து கொண்டே இவ்வாறு நடிகைகளைப் பற்றி இழிவாக பேசுவது தவறான ஒரு செயல்.

இதனை கண்டித்து ‘இந்த மனிதன் எப்பொழுதுமே இப்படித்தான் இவரை போன்ற குணமுடைய சில ஆடியன்ஸ்களால் தான் இவருக்கு இன்னமும் வேலை இருந்து வருகிறது’ என பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். இதை கண்டித்து பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.