பிக்பாஸ் ஷாரிக் ஹாசனை இயக்க விரும்பும் முன்னணி இயக்குனர், அதற்குள் இப்படியா!

811

பிக்பாஸ் சீசன் 2 நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. இதில் 16 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர், ஓவியா ஸ்பெஷல் கெஸ்ட் என்று உள்ளே வந்துள்ளார்.

இதில் ரியாஸ்கான் மகன் ஷாரிக் ஹாசனும் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார், இவர் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பே பென்சில் படத்தில் வில்லனாக நடித்தவர்.

மேலும், இயக்குனர் கௌதம் மேனன் கூட உங்கள் மகனை நான் இயக்குகிறேன் என்று உமா ரியாஸிடம் ஒரு நாள் தெரிவித்தாராம்.எப்படியும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஷாரிக் ஹாசனுக்கு நல்ல மார்க்கெட் தான் இருக்கும் போல.