பிணவறையில் கிடந்த இளம் செவிலியர் உடல்? விடிந்த பிறகு குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

565

புதுக்கோட்டை அருகே சக ஊழியர் முன்பு கடுமையான வார்த்தையால் மருத்துவர் திட்டியதால் மன உளைச்சலில் செவிலியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் முத்துகுடா கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜா. இவரின் மகள் தாயம்மாள். வயது 23. செவிலியர் கோர்ஸ் முடித்துள்ள இவர் மணமேல்குடி அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளாக செவிலியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்றிரவு பணியில் இருந்தபோது தாயம்மாள் அங்கு ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த மருத்துவர் ஒருவர், ‘ எதற்காக அவருடன் பேசுகிறாய். இனி நீ இரவு நேர பணிக்கு வரவேண்டாம்’ என அனைவரின் முன்பும் கடுமையான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.

மேலும் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரையும் கண்டித்திருக்கிறார். அனைவர் முன்னிலையிலும் அவமானப்பட்ட தாயம்மாள் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் மருத்துவமனையில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்து.

ஆனால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம், தாயம்மாளின் உறவினருக்கு தகவல் தெரிவிக்காமல் தாயம்மாள் உடலை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது.

பின்னர் தாயம்மாள் உடன் வேலை பார்த்த சக ஊழியர் ஒருவர் இதுகுறித்து தாயம்மாளின் உறவினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

தாயம்மாளின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றுபார்த்தபோது அங்கு எந்த வார்டிலும் தாயம்மாள் இல்லை. அங்கு தாயம்மாளின் உடல் பிணவறையில் கிடத்தப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தாயம்மாளின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

தன் மகள் தற்கொலை செய்து கொள்ள வாய்பில்லை என தெரிவிக்கும் பெற்றோர்கள், மருத்துவமனையில் கொலை செய்யப்பட்டாரா? எனவும் சந்தேகம் எழுப்புகின்றனர்.

தற்காக யாரிடமும் தெரிவிக்காமல் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் எனவும் தாயம்மாளின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தனது மகளின் மரணத்திற்கு காரணமான மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை கோரி தாயம்மாளின் குடும்பத்தினர் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.