திவ்யதர்சினி..
விஜய் டிவியில் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திவ்யதர்சினி. இவர் தனுஷின் பவர்பாண்டி படத்திலும், ஜிவி பிரகாஷ் நடித்த சர்வம் தலைமையும் படத்திலும் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதேபோல், அதர்வா மணிகண்டன் நடித்த மத்தகம் என்ற வெப்தொடரிலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொகுப்பாளினி டிடிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் டிடி, முன்னணி நடிகர்களின் திரைப்பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இதற்கிடையில் படங்களில் நடித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார். தற்போது இதுவரை இல்லாத கவர்ச்சியில் சேலையில் மயக்கும் படியான போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.