பிரபல இயக்குனருடன் மணக்கோலத்தில் நடிகை அதுல்யா.. அதிர்ச்சியளித்த புகைப்படம்!

676

திரைப்படத்துறையில் சிறு படங்கள் மூலம் புதுமுக நடிகைகள் அறிமுகமாவது உண்டு. அந்த வகையில் காதலை மையமாக கொண்டு வெளிவந்த ”காதல் கண் கட்டுதே” என்ற படம் மூலம் அறிமுகமான நடிகைதான் அதுல்யா. இவர் சமீபத்தில் பல படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் நடிகை அதுல்யா மணக்கோலத்தில் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதுல்யா மணப்பெண்ணாகவும், அவருக்கு அருகில் இயக்குனர் சமுத்திரகனி அமர்ந்து இருப்பது போலவும் அந்த புகைப்படத்தில் உள்ளது.

ஆனால் அந்த புகைப்படம் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நாடோடிகள் 2 படத்தில் திருமண காட்சியில் எடுக்கப்பட்டது. நாடோடிகள் 2 படத்தில் நாயகியாக அதுல்யாவிற்கு நடிகர் சசிகுமார் ஹீரோவாக நடித்துவருகிறார்கள்.