பிரபல மூத்த சின்னத்திரை நடிகை அமிதா உட்கடா தனது 70-வது வயதில் காலமானார்.இந்தி தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் அமிதா. பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
நுரையீரல் நோயால் அமிதா பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக செயற்கை சுவாசத்தின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அமிதாவின் நுரையீரல் முற்றிலுமாக செயலிழந்த நிலையில் அவர் காலமானார்.அமிதாவின் மகன் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் மும்பையில் உள்ள தாயின் இல்லத்துக்கு விரைந்துள்ளார்.இன்று அவர் மும்பைக்கு வந்து சேர்ந்தவுடன் அமிதாவின் இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளன.