பிரபல நடிகையிடம் தவறாக நடந்த 15 வயது சிறுவன் – சிக்கியபிறகு நடந்தது இதுதான்.!!.

618

நடிகைகளை சுற்றி எப்போதும் 10 பாதுகாவலர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது என நாம் நினைக்கிறோம். ஆனால் அதையும் மீறி சிலர் அத்துமீறி நடக்கின்றனர் என நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.

6 மாதங்களுக்கு முன்பு இவர் ஒரு விருது விழாவிற்கு சென்றாராம். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் ஒருவர் இவரிடம் தவறாக நடந்துள்ளார். அந்த கையை பிடித்துவிட்ட சுஷ்மிதா சென்னுக்கு அதிர்ச்சியாகி இருந்தது – காரணம் அவனின் வயது வெறும் 15 என்பது தான்.

இது பற்றி நான் புகார் அளித்திருந்தால் அவன் வாழ்க்கை முடிந்துவிடும். அதனால் அவனை அழைத்து சென்று அட்வைஸ் செய்தேன். முதலில் நான் எந்த தப்பும் செய்யவில்லை என சமாளித்த அவன் பின் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். இது தவறு என்று கூட அவனுக்கு யாரும் சொல்லி தராமல் இருந்தது தான் எனக்கு வருத்தமாக இருந்தது என சுஷ்மிதா கூறியுள்ளார்.